புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 13 டிசம்பர் 2021 (15:42 IST)

2 டோஸ் தடுப்பூசியால் ஒமிக்ரானில் இருந்து பாதுகாப்பு கிடைக்காது: பிரதமர் அதிர்ச்சி தகவல்

இரண்டு டோஸ் தடுப்பு ஊசி போட்டாலும் ஒமிக்ரானில் இருந்து பாதுகாப்பு கிடைக்காது என்றும் எனவே பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தியே ஆகவேண்டும் என்றும் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்திஉள்ளது
 
கொரோனா வைரஸ் பாதிப்பை அடுத்து தற்போது பிரிட்டனில் ஒமிக்ரான் வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டவர்களும் ஒமிக்ரானால் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள் ஒமிக்ரான் வைரஸை தடுப்பதற்கு கண்டிப்பாக 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் பூஸ்டர் தடுப்பூசியையும் போட வேண்டும் என்றும் ஒமிக்ரான் வைரஸை கொரோனா தடுப்பூசியால் பாதுகாப்பு கிடைக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
எனவே பொதுமக்கள் அனைவருக்கும் மூன்றாவதாக பூஸ்டர் தடுப்பு ஊசி போட முடிவு செய்துள்ளதாகவும் ஒரு மாதத்திற்குள் அனைத்து பொது மக்களுக்கும் போட வேண்டும் என்ற இலக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்