1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. ca exam will be conducted only twice in year

இனிமே வருஷத்துக்கு 2 முறை மட்டுமே CA தேர்வு!.. ICAS அதிரடி அறிவிப்பு..

ca exam
வருடத்திற்கு மூன்று முறை நடைபெற்று வந்த சிஏ இறுதி தேர்வு இனிமேல் வருடத்திற்கு இரண்டு முறை மட்டுமே நடைபெறும் என இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் (ICAS) அறிவித்திருக்கிறது. இதன்படி CA இறுதித் தேர்வு ஒவ்வொரு வருடமும் மே மற்றும் நவம்பரில் மட்டுமே நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது

CA தேர்வை பொருத்தவரை முதல் நிலை இடைநிலை மற்றும் இறுதித் தேர்வு என மூன்று கட்டங்களாக தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த மூன்று கட்ட தேர்வுகளும் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்பட்டு வந்தது. அதில் முதல் நிலை மற்றும் இடைநிலை தேர்வுகள் வருடத்திற்கு மூன்று முறை நடத்தப்படும் என 2024 வருடம் அறிவிக்கப்பட்டது..

அதன்பின் CA இறுதி கட்ட தேர்வும் ஆண்டுக்கு மூன்று முறை நடத்தப்படும் என கடந்த வருடம் மார்ச் மாதத்தில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்தான் தற்போது சிஏ இறுதித் தேர்வு இரண்டு முறை மட்டுமே நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதேநேரம் CA இறுதித் தேர்வு மட்டுமே வருடத்திற்கு இரண்டு முறையாக குறைக்கப்பட்டிருக்கிறது.. மற்றபடி முதல் மற்றும் இரண்டாம் நிலை தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போல வருடத்திற்கு மூன்று முறை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது..
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
இன்று இரவு யாரும் ரயிலில் பயணம் செய்ய வேண்டாம்.. ஈரானியர்களுக்கு இஸ்ரேல் விடுத்த எச்சரிக்கை: