தொடர்புடைய செய்திகள்
- தனியார் பள்ளி மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா.. தேதி அறிவிப்பு..!
- பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு.. சேலம் மாணவி முதலிடம்..!
- 828 பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஹெச்ஐவி பாதிப்பு.. அதிர்ச்சி காரணம்.. எந்த மாநிலத்தில்?
- காணாமல் போன பள்ளி மாணவர்கள் மீட்பு.. அம்மாவே அழைத்து சென்றாரா?
- வன்முறையில் ஈடுபடும் மாணவர்களுக்கு 2 ஆண்டுகள் ஜெயில்.. ரயில்வே காவல்துறை டிஎஸ்பி
சி.ஏ. படிப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு: 20 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்று சாதனை..!
சிஏ படிப்புக்கான தேர்வு முடிவுகள் சற்றுமுன் வெளியாகி உள்ள நிலையில் இதுவரை ஒவ்வொரு ஆண்டும் 13,000 பேர் முதல் 14000 பேர் வரை தேர்ச்சி பெற்று வந்த நிலையில் இந்த ஆண்டு 20,000 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிஏ முதல் தொகுதி தேர்வை இந்த ஆண்டு 74 ஆயிரத்து 887 மாணவர்கள் எழுதினர். அதில் 20 ஆயிரத்து 479 பேர் தேர்ச்சி பெற்றதாகவும், இரண்டாவது தேர்வை எழுதிய 58 ஆயிரத்து 891 மாணவர்களில் 21 ஆயிரத்து 408 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் சி.ஏ. குரூப் 1 இண்டர் தேர்வு எழுதிய 1 லட்சத்து 17 ஆயிரத்து 764 பேரில் 31 ஆயிரத்து 978 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், சி.ஏ. குரூப் 2 இன்டர் தேர்வு எழுதிய 71 ஆயிரத்து 145 பேர்களில் 13 ஆயிரத்து எட்டு பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிஏ தேர்வு முடிவுகளை icaiexam.icai.org, icai.org, icai.nic.in ஆகிய இணையதளங்களில் மாணவர்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம்
Edited by Mahendran
