வன்முறையில் ஈடுபடும் மாணவர்களுக்கு 2 ஆண்டுகள் ஜெயில்.. ரயில்வே காவல்துறை டிஎஸ்பி
ரயில் நிலையம் அல்லது ரயில்வே ஸ்டேஷனில் வன்முறையில் ஈடுபடும் மாணவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் ஜெயில் தண்டனை என ரயில்வே காவல்துறை டிஎஸ்பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் பொது இடங்களில் பேருந்துகளில் ரயில்களில் வன்முறைகளில் ஈடுபடும் சம்பவம் அவ்வப்போது நடந்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் கண்காணிப்பு பணிகள் மேற்கொண்டுள்ளதாக கூறியுள்ள ரயில்வே காவல்துறை டிஎஸ்பி ரமேஷ் ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள் என்றும் பயணிகளுக்கு இடையூறு செய்பவர்கள் மற்றும் விதிகளை மீறுபவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக ரயில்களில் மற்றும் ரயில் நிலையங்களில் மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டால் அவர்கள் மீது இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்கும் விதியின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எனவே மாணவர்கள் தேவையற்ற அசம்பாவித சம்பவங்களில் ஈடுபட வேண்டாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கல்லூரி மாணவர்களுக்கிடையே நடக்கும் மோதலை தடுக்க பெற்றோர் வாயிலாக தொடர்ந்து அறிவுரை வழங்கி வருவதாகவும் மோதலில் ஈடுபடும் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
Edited by Mahendran