1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 26 ஜூலை 2022 (17:35 IST)

20 ஆண்டுகள் சிறையில் இருந்த நபருக்கு திருமணம்: முதலிரவு அன்றே எஸ்கேப் ஆன மணப்பெண்!

bride
20 ஆண்டுகள் சிறையில் இருந்த நபர் ஒருவர், சிறையிலிருந்து விடுதலை ஆனவுடன் திருமணம் செய்துகொண்ட நிலையில் முதலிரவு அன்றே மணப்பெண் திடீரென மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
உத்தர பிரதேச மாநிலத்தில் போலி பலாத்கார வழக்கில் சிக்கி விஷ்ணு திவாரி என்பவர் சுமார் 20 ஆண்டுகள் சிறையில் இருந்தார். அதன் பிறகு அவர் நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்டார் 
 
இந்த நிலையில் 20 ஆண்டுகள் சிறையில் இருந்த அவர் சமீபத்தில் விடுதலையானார். இதனையடுத்து திவாரிக்க்கு அவரது குடும்பத்தினர் பெண் பார்த்து திருமணம் செய்து வைத்தனர் 
 
இந்த நிலையில் திருமணமான அன்று இரவே புதுமணப்பெண் அவரிடமிருந்த ஒரு லட்ச ரூபாயைச் சுருட்டிக் கொண்டு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது