தொடர்புடைய செய்திகள்
- அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்த வழக்கு: இன்று தீர்ப்பு
- 7ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: ரூ.10 லட்சம் நஷ்ட ஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு
- ஜீன்ஸ் போட அனுமதிக்காததால் கணவரை கத்தியால் குத்திய மனைவி: மாமியார் புகார்.
- அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை: சென்னை ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு!
- 9 மணிக்கு தீர்ப்பு, 9.15 மணிக்கு அதிமுக பொதுகுழு: கியூ.ஆர். கோடு அட்டை உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி
மகள் வாழ்க்கைக்காக மருமகனை மன்னித்த மாமியார்; வழக்கில் இருந்து விடுதலை
சேலம் ஆத்தூரை சேர்ந்த பெண் ஒருவர் தன்னை அரிவாளால் வெட்டிய மருமகனை மன்னித்ததால் அவருக்கு விடுதலை கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
கடந்த 2017ஆம் ஆண்டு சேலம் ஆத்தூரை சேர்ந்த சிவசுப்பிரமணியன் என்பவர் வீட்டுச்சண்டையின்போது மாமியாரை அரிவாளால் வெட்டினார். இதனால் படுகாயமடைந்த மாமியார் சிகிச்சை பெற்று குணம் ஆனார்
இது குறித்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் மாமியாரை வெட்டிய வழக்கில் மருமகன் சிவசுப்பிரமணிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது
இந்த நிலையில் மருமகன் சிறையில் இருந்ததால் மகள் மற்றும் பேரக்குழந்தைகள் கஷ்டப்படுவதை அறிந்த மாமியார் தனது மருமகனை மன்னித்து விட்டதாகவும் எனவே அவரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் மனுத்தாக்கல் செய்திருந்தார்
இந்த மனுவை விசாரணை செய்த நீதிமன்றம் 10 ஆண்டுகள் தண்டனையை ரத்து செய்து சிவசிவசுப்ரமணியனை விடுதலை செய்தது. இந்த வழக்கின் தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
அடுத்த கட்டுரையில்
