‘முழுக் கவனமும் வேலையில்தான்… ‘ திருமணம் குறித்து நித்யா மேனன் பதில்!
நடிகை நித்யா மேனன் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக சில தினங்களாக சமூகவலைதளங்களில் தகவல்கள் வெளியானது.
மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நித்யா மேனன் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் அவ்வப்போது நடித்து வருகிறார். நடிகையாக இருந்தாலும் இயக்கத்தைப் பற்றியும் சினிமாவைப் பற்றியும் நல்ல அறிவு உள்ள நடிகை என பாராட்டப்படுபவர் . தொடர்ந்து படங்களில் நடித்து வரும் அவர் பற்றி அவ்வப்போது சில வதந்திகள் வெளியாகி வருகின்றன.
அந்த வகையில் சில தினங்களாக அவர் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தகவல்கள் சமூகவலைதளங்களில் பரவின. ஆனால் அதை மறுத்துள்ள நித்யா மேனன் இப்போது முழு கவனும் வேலையில்தான் உள்ளது. ஊடகங்கள் இதுபோன்ற தகவ்ல்களை வெளியிடும் முன்னர் அதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார்.