வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran

திருமணமாகாதவர் சான்றிதழ் இருந்தால் தான் திருமணம்: அமைச்சர் அதிரடி அறிவிப்பு

sekhar
கோவில்களில் திருமணம் செய்ய விரும்புபவர்கள் திருமணமாகாதவர் என்ற சான்றிதழை பெற்று வந்தால் தான் திருமணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் திருமணம் நடத்த விரும்புபவர்கள் திருமணமாகாதவர் என்ற சான்றிதழை சம்பந்தப்பட்ட கோவில் நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
தமிழகத்தில் உள்ள அனைத்து இ-சேவை மையங்களிலும் திருமணமாகாதவர் என்ற சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறநிலையத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.