திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 21 ஜூலை 2022 (12:41 IST)

சீசன்களாக வெளியாகும் நயன் – விக்கி திருமணம்! – Netflix போட்ட மாஸ்டர் ப்ளான்!

Vignesh Sivan Nayanthara
சமீபத்தில் நடந்து முடிந்த விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணத்தை இரண்டு சீசன்களாக நெட்ப்ளிக்ஸ் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சினிமா உலகில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டு வந்த விக்னேஷ் சிவன் – நயன்தாராவின் திருமணம் கடந்த மாதம் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இந்த திருமண விழாவில் பல்வேறு திரை பிரபலங்களும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வை நெட்ப்ளிக்ஸ் ஓடிடி நிறுவனம் தொகுத்து சீசன்களாக வெளியிட உள்ளது.

இரண்டு சீசன்களாக தயாராகி வரும் இந்த திருமண நிகழ்வின் முதல் சீசன் விரைவில் வெளியாக உள்ளதாகவும், இரண்டாவது சீசனில் நயன்தாராவின் திரை வாழ்க்கை, விக்னேஷ் உடனான காதல் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை இணைத்து தயாரித்து வருவதாகவும் நெட்ப்ளிக்ஸ் நிறுவன அதிகாரி தெரிவித்துள்ளார்.