திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 13 பிப்ரவரி 2023 (17:02 IST)

மும்பையில் உள்ள கூகுள் நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள கூகுள் நிறுவனத்திற்கு தொலைப்பேசியில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

உலகின் முன்னனி இணையதள நிறுவனம் கூகுள். இந்தியாவின் புனே நகரில்  இதன் கிளை அலுவலகம் உள்ளது.

இங்குள்ள முந்த்வா பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி வளாகத்தின் 11 வது மாடியில் இருந்த அலுவலகத்தில் நேற்றிரவு ஒரு அழைப்பு வந்தது. அதில், நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இதையடுத்து. போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, காவல்துணை ஆணையர் விக்ராந்த் தேஷ்முக் தலைமையிலான போலீஸார், சம்பந்தப்பட  இடத்தில்  குவிக்கப்பட்டு, சோதனை செய்தனர்.

அதில், வெடிகுண்டு மிரட்டல் பொய்புரளி என்று போலீஸார் உறுதி செய்தனர்.  இந்த மிரட்டல் விடுத்தவர் பற்றி அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது, ஐதராபாத் நகரைச் சேர்ந்த ஒரு நபர் குடிபோதையில் இப்படி பேசியது தெரியவந்தது.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.