வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 6 பிப்ரவரி 2023 (17:27 IST)

மகளிர் ஐபிஎல் : மும்பை அணிக்கு பயிற்சியாளர் தேர்வு

women ipl
மகளிர் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், மும்பை அணிக்கு பயிற்சியாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 

ஒவ்வொரு ஆண்டும் ஆடவர்  ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடந்து வரும் நிலையில், இந்தாண்டு முதல்,  மகளிர் ஐபிஎல் நடைபெறவுள்ளது.

இதில், அகமதாபாத், மும்பை, பெங்களூரு, டெல்லி மற்றும் லக்னோ ஆகிய ஐந்து அணிகள் ஏலம் எடுக்கப்பட்டுள்ளன.
 

இந்த நிலையில்,மும்பை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இங்கிலாந்து மகளிர் அணியின் முன்னாள் வீராங்கனை சார்லட் எட்வர்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.