பாஜகவுக்குப் புதிய தலைவர் – தீயாய் வேலை செய்யும் தலைமை !

Last Modified ஞாயிறு, 9 ஜூன் 2019 (17:33 IST)
தேர்தல் வெற்றிக்குப் பிறகு பாஜகவுக்குப் புதிய தலைமை அமைக்க அக்கட்சியின் தலைமை தீவிரமாக வேலை செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
 
பாஜகவின் தலைவராக அமித்ஷா பதவி வகித்து வந்தார். அவரது பதவிக்காலம் தேர்தலுக்கு முன்பாகவே முடிந்தது. ஆனாலும் தேர்தலை மனதில் கொண்டு அவரே தலைவராக நீடித்தார். இப்போது தேர்தல் முடிந்துள்ள நிலையில் பாஜகவுக்கு புதிய தலைமை அமைப்பதற்கான தேர்தலை நடத்த இருக்கின்றனர்.
 
இப்போதையத் தலைவர் அமித்ஷா உள்துறை அமைச்சர் ஆகிவிட்டதால் அவரால் இனி தலைவராகத் தொடரமுடியாது. எனவே ஜூன் 13 , 14 ஆகியத் தேதிகளில் நிர்வாகிகள் மற்றும் மாநிலப் பொதுச்செயலாளர்களை சந்தித்து தேர்தல் குறித்து கலந்தாலோசிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :