அப்பாவுக்கு வேலை வேண்டும் ! மோடிக்கு கடிதம் போட்ட சிறுவன்...
உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 13 வயது மாணவர் ஒருவர், பிரதமர் மோடிக்கு தொடர்ந்து 3 வருடமாக கடிதம் எழுதிவந்த நிலையில், தற்போது இந்த விஷயம் ஊடகங்களில் கவனம் பெற்றுள்ளது.
பிரதமர் மோடிக்கு தொடர்ந்து கடிதம் எழுதும் அந்த 13 வயது சிறுவன் தற்போது அரசு பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.அந்த மாணவரின் தந்தை பங்கு வர்த்தனையில் பணிபுரிந்து வந்திருக்கிறார்.
மூன்று வருடங்களுக்கு முன்பு அந்த மாணவரின் தந்தைக்கு வேலை பறிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.அவரது வேலை பறிக்கப்பட்டதால் குடும்ப சூழலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்த மாணவர் தன்னுடைய தந்தையின் வேலையை தந்தைக்கே தந்துதவுமாறு தொடர்ந்து பல கடிதங்களை பிரதமர் மோடிக்கு எழுதி உள்ளார். இவ்வாறு அந்த மாணவர் 37 கடிதங்கள் எழுதியுள்ளதாக தெரியவந்துள்ளது.
ஆனால் இதுவரை மோடி அரசின் தரப்பிலிருந்து அவர் எழுதிய எந்த கடிதங்களுக்கும் பதில் வந்ததில்லை என மிகவும் வருத்ததோடு கூறியுள்ளார்.
இந்நிலையில் தற்போது இந்த உத்திரப் பிரதேச மாணவரை பற்றிய செய்தி ஊடகங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.