வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 8 ஜூன் 2019 (15:06 IST)

மோடியின் பொய்களுக்கு எதிராக போராடி வருகிறோம் – ராகுல் காந்தி பேச்சால் சர்ச்சை

வயநாடு தொகுதியில் வெற்றி பெற்ற ராகுல் காந்தி இன்று அம்மக்களை சந்தித்து நன்றி கூறினார். இதற்காக மூன்று நாள் பயணமாக வயநாடு சென்றுள்ள ராகுல் காந்தி முதல் நாளான இன்று மலப்புரம் பகுதி மக்களை சந்தித்து நன்றி கூறுகிறார்.

அப்போது பேசிய ராகுல் காந்தி “பிரதமர் மோடியின் தேர்தல் பிரச்சாரம் பொய்களாலும், விஷத்தாலும் நிரம்பியிருந்தது. ஆனால் காங்கிரஸ் உண்மையையும், அன்பையும் கொண்டு பிரச்சாரம் செய்தது” என குறிப்பிட்டுள்ளார்.

இன்று பிரதமர் மோடியும் கேரளாவிற்கு பயணித்துள்ள நிலையில் ராகுல் காந்தி இப்படி பேசியிருப்பது சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது.