1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. BJP plan to make wishes meet for PM Modi

வேளாண் சட்டங்களை திரும்ப பெற்ற பிரதமர்! – பாராட்டு விழா நடத்த பாஜக முடிவு!?

National
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்த நிலையில் அவருக்கு பாராட்டு விழா நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மத்திய அரசு கடந்த ஆண்டு அமலுக்கு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த ஒரு ஆண்டு காலமாக நாடு முழுவதும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நீண்டகால போராட்டத்திற்கு பிறகு இன்று பிரதமர் மோடி வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பிற்கு பல அரசியல் கட்சிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளன.

இந்நிலையில் விவசாயிகளின் போராட்டத்தை தொடர்ந்து பிரதமர் மோடி எடுத்துள்ள இந்த முடிவை பாராட்டும் வகையில் நாடு முழுவதும் பல பகுதிகளில் பிரதமர் மோடிக்கு பாராட்டு கூட்டங்களை நடத்த பாஜக முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
அஸீம் ரஃபீக்: இனவெறி சர்ச்சையால் அதிரும் இங்கிலாந்து கிரிக்கெட் - நடப்பது என்ன?