1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Vellore house collapse incident

வேலூரில் வீடுகள் இடிந்து 9 பேர் பலி; முதல்வர் நிவாரணம் அறிவிப்பு!

Tamilnadu
வேலூரில் வீடுகள் இடிந்து 9 பேர் உயிரிழந்த நிலையில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு முதல்வர் நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

வடகிழக்கு பருவமழையால் தமிழகம் முழுவதும் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அஜிதியா வீதியில் கனமழை காரணமாக 3 வீடுகள் அடுத்தடுத்து இடிந்து விழுந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். 8 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
வேளாண் சட்டங்களை திரும்ப பெற்ற பிரதமர்! – பாராட்டு விழா நடத்த பாஜக முடிவு!?