1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. BJP next target West Bengal Amit Shah

எங்கள் கட்சியின் அடுத்த இலக்கு இதுதான்: அமித்ஷா!!

பாஜக
பாஜக-வின் அடுத்த இலக்கு மேற்கு வங்காளத்தில் ஆட்சியை பிடிப்பது தான் என பாஜக தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.


 
 
ஐந்து மாநில தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்றது. உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் நேரடியாகவும், சிறிய கட்சிகளின் ஆதரவுடன் மணிப்பூர், கோவாவிலும் ஆட்சியை கைப்பற்றியது.
 
மேலும், சமீபத்தில் டெல்லியில் நடந்த மாநகராட்சி தேர்தலிலும் அமோக வெற்றி பெற்றது. இதனால் 3 மாநகராட்சியையும் அந்த கட்சி தக்க வைத்துக் கொண்டுள்ளது.
 
இந்நிலையில் மேற்கு வங்காளத்தில் வெற்றி பெறுவது தான் பாஜக-வின் அடுத்த இலக்கு என்று அமித்ஷா கூறியுள்ளார். மேற்கு வங்காளத்தில் ஆட்சிக்கு வரும் போது வங்காள தேச எல்லையை கண்டிப்பாக மூடி விடுவோம் எனவும் தெரிவித்தார்.
அடுத்த கட்டுரையில்
அதிமுக இரு அணி பேச்சு வார்த்தை ; அனைத்தும் நாடகம் : விளாசும் சசிகலா புஷ்பா