1. செய்திகள்
  2. செய்திகள்
  3. அரசியல் நிலவரம்
  4. Sasikala pushpa comment everything dramma

அதிமுக இரு அணி பேச்சு வார்த்தை ; அனைத்தும் நாடகம் : விளாசும் சசிகலா புஷ்பா

Sasikala pushpa
அதிமுகவில் இரு அணிகளும் பேச்சு வார்த்தை நடத்துவதாக கூறி வருவது அனைத்தும் நாடகம் என அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
எடப்பாடி பழனிச்சாமி அணி மற்றும் ஓ.பி.எஸ் அணி ஆகிய இரண்டும் எப்போது பேச்சுவார்த்தை நடத்தி ஒரு முடிவுக்கு வரும் என்பதுதான் தமிழக அரசியலில் பெரிய கேள்வியாக இருக்கிறது. இதுதான் தற்போது செய்தியாகவும் இருக்கிறது.
 
இந்நிலையில், இதுபற்றி டெல்லியில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த சசிகலா புஷ்பா “ஒ.பி.எஸ், எடப்பாடி அணிகளிடையே தற்போது அதிகாரப்போட்டி நிலவுகிறது. நியாயமானவர்கள் போல் தங்களை காட்டிக் கொண்டு, கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் தமிழக மக்கள் அனைவரையும் ஏமாற்றி நாடகம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தற்போது தமிழகத்திற்கு தேவை கொள்கை சார்ந்த அரசியல் கட்சியே” என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
தினகரன் போலீஸ் கஸ்டடியில்; விஸ்வரூபம் எடுக்கும் மனைவி அனுராதா?