1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 6 ஜூன் 2022 (08:57 IST)

மதவெறுப்பு பேச்சு; இந்திய பொருட்களை புறக்கணிக்கும் சவுதி! – பாஜக உறுப்பினர் இடைநீக்கம்!

பாஜக உறுப்பினர்கள் சிலரின் மதவெறுப்பு பேச்சை தொடர்ந்து சவுதியில் இந்த பொருட்கள் புறக்கணிக்கப்பட்டதால் பாஜக செய்தி தொடர்பாளர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பாஜக உறுப்பினர்கள் அவ்வபோது பிற மதம் குறித்த வெறுப்பு பேச்சுகளை பேசிவருவது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது, சமீபத்தில் பாஜக உறுப்பினர் நபிகள் நாயகம் குறித்து பேசிய கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சவுதி மக்கள் இந்திய பொருட்களை புறக்கணிக்கப்போவதாக அறிவித்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து ஒழுங்கு நடவடிக்கை மேற்கொண்ட பாஜக, தனது கட்சியின் தேசிய பெண் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவை கட்சியை விட்டு இடைநீக்கம் செய்துள்ளது. அதேபோல டெல்லி பாஜக ஊடகப்பிரிவு தலைவர் நவீன்குமார் ஜிண்டாவும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து நுபுர் சர்மா அளித்த விளக்கத்தில் “யாருடைய மத உணர்வையும் புண்படுத்துவது என் நோக்கமல்ல. என் கருத்துகளை நிபந்தனையின்றி வாபஸ் பெற்றுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.