1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Bisop Prango heart attack, admitted in hospital

நேற்று கைது, இன்று நெஞ்சுவலி: மருத்துவமனையில் பேராயர் அனுமதி

kerala
கேரள கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்ததாக நேற்று கைதானா பேராயர் பிராங்கோ இன்று நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளார்.

கேரள கன்னியாஸ்திரி ஒருவருக்கு இரண்டு வருடங்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறப்பட்ட பேராயர் பிராங்கோவை வாடிகன் தற்காலிக நீக்கம் செய்து உத்தரவிட்ட நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரம் கிடைத்ததால் நேற்று கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் திடீரென பேராயருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் போலீசார் அவரை எட்டுமானூரில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர். மருத்துவர்கள் பேராயருக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும், அவரது உடல் தேறியவுடன் அவர் சிறையில் அடைக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
உங்கள் அறிவுத்திறன் ஒட்டுமொத்த பாகிஸ்தான் அணியைவிட குறைவு: நடிகைக்கு பாஜக பதிலடி