கேரளாவில் எலி காய்ச்சல்; பலி எண்ணிக்கை 66ஆக உயர்வு
கேரள மாநிலத்தில் வெள்ளம் பாதித்த பின்னர் பரவிய எலி காய்ச்சலுக்கு பலி எண்ணிக்கை 66ஆக உயர்ந்துள்ளது.
கேரள மாநிலத்தில் கனமழை பெய்து கடும் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் கடந்த மாதம் கேரள மாநிலம் முழுவதும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதைத்தொடர்ந்து எலி காய்சால் என்னும் தொற்று நோய் வேகமாக பரவ தொடங்கியது. எலி காய்ச்சல் அறிகுறிகளுடன் வரும் நோயாளிகளுக்கு மருத்துவமனை சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
372 பேருக்கு எலி காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. இதில் கடந்த வாரம் வரை 55பேர் உயிரிழந்து இருந்தனர். நேற்று 11பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் இந்த எலி காய்ச்சல் தொற்று நோய்க்கு கேரளாவில் பல எண்ணிக்கை 66ஆக உயர்ந்துள்ளது.