திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Modified: சனி, 22 செப்டம்பர் 2018 (07:15 IST)

பத்து வருடங்கள் தலைமறைவாக இருந்தவர் தினகரன்: அமைச்சர் உதயகுமார்

மக்களை பற்றி ஒன்றுமே தெரியாதவர் தினகரன் என்றும், பத்து வருடங்கள் தலைமறைவாக இருந்தவர் அவர் என்றும் அமைச்சர் உதயகுமார் விமர்சனம் செய்துள்ளார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 5 பகுதிகளில் 397 பேருக்கு ஒரு கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயகுமார் வழங்கினார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் உதயகுமார் பேசியதாவது:

தினகரன் என்பவர் யார்? அவருக்கும் இந்த அரசுக்கும் என்ன சம்பந்தம். மக்களை பற்றி ஒன்றுமே தெரியாதவர்தான் தினகரன். பத்து வருடங்கள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த தினகரன், இப்போதுதான் மக்களை பற்றி படிக்க ஆரம்பித்துள்ளார். படித்து முடித்துவிட்டு பாஸ் செய்த பின்னர் அவர் பேசட்டும்' என்று விமர்சனம் செய்துள்ளார்.

கடந்த சில மாதங்களாகவே அதிமுக அமைச்சர்கள் டிடிவி தினகரனை கடுமையாக தாக்கி பேசி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது