1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Bird Flu spread in kerala

கேரளாவில் மீண்டும் பரவும் பறவை காய்ச்சல்: 20 ஆயிரம் கோழிகளை அழிக்க முடிவு!

Bird Flu
கேரளாவில் மீண்டும் பறைவை காய்ச்சல் பரவி வருவதை அடுத்து 20 ஆயிரம் கோழிகளை முதல் கட்டமாக அழிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
கேரளாவில் பறவை காய்ச்சல் பரவி வருகிறது என்பதும் அதனை அடுத்து அம்மாநில அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம் 
 
இந்த நிலையில் தற்போது கேரளாவில் மீண்டும் பறவை காய்ச்சல் பரவி வருவதாகவும் கேரளாவில் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இதனை அடுத்து கேரளாவில் உள்ள 20 ஆயிரம் கோழிகளை அழிக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கேரளாவில் பறவை காய்ச்சல் பரவாத வகையில் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது என்பது குறிபிடத்தக்கது
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
நவம்பர் 1ம் தேதி, விசிக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்: திருமாவளவன் அறிவிப்பு!