ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 24 அக்டோபர் 2022 (21:33 IST)

9 பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ராஜினாமா செய்ய தேவையில்லை: கேரள ஐகோர்ட்டு உத்தரவு

kerala highcourt
கேரளாவில் உள்ள ஒன்பது பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர்கள் ராஜினாமா செய்ய தேவையில்லை என அம்மாநில ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. 
 
கேரள கவர்னர் 9 துணைவேந்தர்கள் இன்று ராஜினாமா செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
 
இந்த உத்தரவை எதிர்த்து பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் சார்பில் கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது
 
இந்த மனுவை அவசர வழக்காக விசாரித்த கேரள ஐகோர்ட்,  9 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய தேவையில்லை என்றும் இந்த விவகாரத்தில் கவர்னர் இறுதி முடிவு எடுக்கும் வரை அவர்கள் தங்கள் பதவியை தொடரலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
 
Edited by Mahendran