தொடர்புடைய செய்திகள்
- பா.ஜ.க. பிரமுகர் கொலை: குற்றவாளி மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்களா?
- காந்தி பிறந்த நாளில் கட்சி ஆரம்பிக்கும் பிரசாந்த் கிஷோர்.. பீகாரில் தனித்து போட்டி என தகவல்..!
- ஒலிம்பிக்ஸ் பதக்க வேட்டையை தொடங்கிய இந்தியா! துப்பாக்கி சுடுதலில் முதல் பதக்கம்!
- ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் பிரிவு.! இந்தியா வெளியேற்றம்.! தங்கம் வென்ற சீனா..!!
- வினாத்தாளை கசியவிட்டால் 10 ஆண்டுகள் சிறை, ரூ.1 கோடி அபராதம்! மசோதா நிறைவேற்றம்..!
3ம் வகுப்பு மாணவரை துப்பாக்கியால் சுட்ட 5 வயது சிறுவன்! பீகாரில் அதிர்ச்சி சம்பவம்..!
பீகாரில் மூன்றாம் வகுப்பு மாணவரை அதே பள்ளியில் படிக்கும் ஐந்து வயது மாணவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் தான் பள்ளி மாணவர்கள் மத்தியில் துப்பாக்கி கலாச்சாரம் வளர்ந்துள்ளது என்பது குறித்த செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் அதே போன்ற ஒரு சம்பவம் பீகார் மாநிலத்தில் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் மாநிலத்தில் தனது பையில் துப்பாக்கியை மறைத்து பள்ளிக்கு எடுத்துச் சென்ற ஐந்து வயது சிறுவன் திடீரென அந்த துப்பாக்கியை எடுத்து மூன்றாம் வகுப்பு மாணவனை சுட்டதாகவும் இதனால் அந்த மாணவனுக்கு கையில் காயம் அடைந்ததை எடுத்து சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இதனை அடுத்து சிறுவன் கையில் துப்பாக்கி எப்படி வந்தது? என்று விசாரணை செய்யப்பட்டு வருவதாக அந்த பகுதியின் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் படிக்கும் மாணவர்களின் பைகளை சோதனை இட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
