தொடர்புடைய செய்திகள்
- கொலை, கொள்ளை சம்பவத்திற்கு அடிப்படை போதை பொருள் தான்: டிடிவி தினகரன்
- 3 கொலைகளும் அரசியல் கொலை கிடையாது.. பொய் சொல்கிறார் அன்புமணி: திமுக பிரமுகர்
- பாஜக ஆட்சியில் ஒருவர் மட்டும்தான் பிரதமராக முடியும்.! மற்றவர்களுக்கு உரிமையில்லை..! ராகுல் காந்தி..
- தயாநிதி மாறனை கைது செய்யுங்கள்.. எம்பி பதவியில் இருந்து நீக்குங்கள்: பாஜக பிரபலம்..!
- சீமானை கட்டித்தழுவிக் கொண்ட பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை! - புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்பு!
பா.ஜ.க. பிரமுகர் கொலை: குற்றவாளி மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்களா?
சிவகங்கை மாவட்ட பாஜக செயலாளராக இருந்த செல்வகுமார் என்பவர் நேற்று முன்தினம் திடீரென மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவத்தில் குற்றவாளியை பிடிக்க போலீசார் சென்றபோது குற்றவாளி தப்பிக்க முயற்சி செய்தால் அவர் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.
பாஜகவை சேர்ந்த செல்வகுமார் கொலை தொடர்பாக ஐந்து பேரை பிடித்து போலீசார் விசாரணை செய்து கொண்டிருந்த நிலையில் விசாரணையின் போது திடீரென வசந்த் என்ற நபர் போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயற்சி செய்ததாக தெரிகிறது.
அது மட்டும் இன்றி அவர் காவல்துறை அதிகாரி ஒருவரை தாக்கியதாக கூறப்படும் நிலையில் அவர் மீது போலீசார் துப்பாக்கி நடத்தினர். இதில் படுகாயம் அடைந்த வசந்த் மற்றும் காவலர் ஒருவர் சிவகங்கை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் சிவகங்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
மேலும் செல்வகுமார் கொலை செய்யப்பட்ட வழக்கில் நிலையில் ஏற்கனவே பிடிபட்ட நான்கு பேரிடம் போலீசார் தீவிர விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது.
Edited by Siva
