1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 30 ஜனவரி 2020 (08:41 IST)

திருமணத்தை மீறிய உறவு: முதலிடம் பிடித்த இந்திய நகரம்!

திருமணத்தை மீறிய உறவு வைத்துக்கொள்ள விரும்புபவர்களுக்காக ஒரு செயலி கடந்த 2010ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் இந்த செயலி அசுர வளர்ச்சி அடைந்து மில்லியன்கணக்கான பயனர்களை பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்த செயலியில் அதிக வாடிக்கையாளராக இருப்பவர் இந்தியாவில் உள்ள ஒரு முக்கிய நகரம் என்பது தற்போது தெரியவந்துள்ளது 
 
திருமணத்தை மீறிய உறவு கொள்ள விரும்புபவர்கள் அதாவது திருமணம் செய்து கொண்டவர்கள், விவாகரத்து ஆனவர்கள், துணையை இழந்து தனியாக வாழ்பவர்கள் ஆகியோர்களுக்காக ஒரு செயலி தொடங்கப்பட்டது. க்ளீடன் என்னும் இந்த செயலி கடந்த 2010ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் படிப்படியாக வளர்ந்து தற்போது அசுர வளர்ச்சியை பெற்றுள்ளது
 
2020 ஆம் ஆண்டில் மட்டும் இந்த செயலியில் 567% சதவீதம் பேர் இணைந்துள்ளதாகவும் குறிப்பாக புத்தாண்டு தினத்தில் மட்டும் 300% பயனாளர்களிடம் இணைந்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த செயலியில் அதிகமான வாடிக்கையாளர்கள் பெங்களூர், மும்பை, கொல்கத்தா, டெல்லி, பூனே, ஹைதராபாத், சென்னை, அகமதாபாத், ஜெய்ப்பூர்,சண்டிகர், லக்னோ, கொச்சி, விசாகப்பட்டினம், நாக்பூர்  ஆகிய நகரங்களில் இருந்து தங்களை இணைத்துக்கொண்டு உள்ளதாகவும் இதில் முதலிடத்தில் பெங்களூர் தான் இருப்பதாகவும் கூறியுள்ளது
 
இந்தியாவிலேயே பெங்களூரில் தான் அதிகம் பேர் திருமணத்தை மீறிய உறவில் விருப்பம் காட்டியதாக இந்த செயலியின் புள்ளி விவரம் ஒன்று தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயலியில் 25 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே இணைந்து கொள்ளலாம் என்பது ஒரு நிபந்தனை என்பது குறிப்பிடத்தக்கது