1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Modified: புதன், 22 ஜனவரி 2020 (14:24 IST)

திருமணம் செய்துகொள்ள தயாரான இரு பெண்கள் ...

திருமணம் செய்துகொள்ள தயாரான  இரு பெண்கள் ...
தென் ஆப்பிரிக்கா நாட்டில் வசித்து வருபவர்கள் லீ ஹீகீஸ் மற்றும் மேகன் வால்டிங்.இந்த இரு பெண்களும் ஒருவரை ஒருவர் மனதார விரும்பும் ஓரின ஈர்ப்பாளர்கள் ஆவர்.
அதனால் இவர்கள் இருவரும் எல்லோருக்கும் தெரியும்படி கிரேண்டாக  திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதற்காக ஒரு திருமண மண்டபத்தின் உரிமையாளரிடம் இது குறித்து கேட்டுள்ளனர்.
 
அதைக் கேட்ட திருமணம் மண்டப உரிமையாளர், ஓரின ஈர்ப்பாளர் திருமணம் என்பதி கிரிஸ்தவ மத நம்பிக்கைக்கு எதிரானது என தெரிவித்து,  ஹீகீஸ் மற்றும் மேகன் வால்டிங்கின் திருமணத்திற்கு மண்டபம் தர மறுத்துள்ளார்.
 
இதுகுறித்து  ஹீகீஸ் மற்றும் மேகன் வால்டிங் ஆகியோர் தம் டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, ஓரின ஈர்ப்பாளர்களாகிய எங்கள் திருமணத்திற்கு பாகுபாடு காட்டப்படுகிறது; எங்கள் இருவரின் திருமணம் விரைவில் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.