செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 24 ஜனவரி 2020 (18:17 IST)

செளந்தர்யாவுக்கு எப்படி 2வது திருமணம் நடந்தது? செக் வைத்த செல்லூரார்!

ரஜினி தனது மகளுக்கு 2வது திருமணம் நடத்துகிறார் என்றால், அதற்கு பெரியாரின் கொள்கைகள் தான் காரணம் என செல்லூர் ராஜு பேசியுள்ளார். 
 
ரஜினிகாந்த் துக்ளக் ஆண்டு விழாவில் பெரியார் குறித்து பேசியது சர்ச்சையை கிளப்பியது. இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என திராவிட விடுதலை கழகத்தினர் கூறி வந்த நிலையில், தான் மன்னிப்பு கேட்க முடியாது என ரஜினிகாந்த் தெரிவித்தார்.
 
இந்நிலையில் இது குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் கேட்ட போது அவர் பின்வருமாறு பதில் அளித்தார், ரஜினி எப்போதும் நிதானமாக பேசுபவர். ஆனால் இந்த விஷயத்தில் அவரை யாரோ தவறாக வழி நடத்துகின்றனர். 
 
பெரியார் என்பவர் வெறும் கடவுள் மறுப்பாளர் என்று சொல்வது தவறு. தீண்டாமை ஒழிப்பு, ஜாதி ஒழிப்புக்காக அவர் ஆற்றிய பங்கினை யாரும் மறுக்க முடியாது. ரஜினி தனது மகளுக்கு 2வது திருமணம் நடத்துகிறார் என்றால், அதற்கு பெரியாரின் கொள்கைகள் தான் காரணம் என தெரிவித்துள்ளார்.