தொடர்புடைய செய்திகள்
- தேர்தல் முடிவுக்கு பின்னரும் உயர்ந்து கொண்டே வரும் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ் நிலவரம்..!
- வாக்கு எண்ணிக்கை நாளில் பங்குச்சந்தை சரிவு: விசாரணை நடத்த உச்ச நீதிமன்றத்தில் மனு!
- சந்திரபாபு நாயுடு மனைவியின் சொத்து மதிப்பு 5 நாளில் ரூ.572 கோடியாக உயர்வு..!
- பாஜகவை புறக்கணித்த இந்துக்கள்.! ராமர் கோவில் கட்டிய மண்ணிலேயே தோல்வி.! திருமா விமர்சனம்.!!
- தேர்தல் முடிவுகளில் சந்தேகம் இருந்தால் நீதிமன்றத்தை நடலாம்..! தேமுதிகவிற்கு சத்யபிரத சாஹு விளக்கம்..!
தேர்தல் தோல்வி எதிரொலி: திடீரென அயோத்தி ராமர் கோவிலுக்கு வரும் கூட்டம் குறைந்ததா?
அயோத்தி ராமர் கோயில் இருக்கும் தொகுதியில் பாஜக தோல்வியடைந்த நிலையில் அயோத்தி ராமர் கோவிலுக்கு வரும் கூட்டம் வெகுவாக குறைந்துள்ளதாக கூறப்படுவது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
அயோத்தியில் ராமர் கோவில் திறந்ததால் பாஜகவுக்கு பெரும் வாக்குகள் கிடைக்கும் என்றும் குறிப்பாக உத்தரபிரதேசத்தில் 80க்கு 80 கிடைக்கும் என்றும் கூறப்பட்டது. ஆனால் அயோத்தி ராமர் கோயில் இருக்கும் பைசாபாத்தில் தொகுதியிலேயே பாஜக தோல்வி அடைந்தது என்பதும் உத்தரபிரதேசம் மாநிலத்தை பொருத்தவரை பாஜக கூட்டணியை விட இந்தியா கூட்டணி தான் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பைசாபாத் தொகுதியில் சமாஜ்வாதி வேட்பாளர் ஆவதேஷ் பிரசாத் 554289 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற நிலையில் பாஜகவின் லல்லு சிங் பாஜக 499722 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
இந்த நிலையில் தேர்தல் முடிவுக்கு பின்னர் அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்வதை பாஜக தொண்டர்கள் நிறுத்திவிட்டார்கள் என்றும் அதனால் ராமர் கோவிலுக்கு வரும் கூட்டம் வெகுவாக குறைந்திருப்பதாகவும் இதனால் சில விமானங்களும் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
Edited by Mahendran
