தேர்தல் முடிவுக்கு பின்னரும் உயர்ந்து கொண்டே வரும் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ் நிலவரம்..!
தேர்தல் முடிவு வெளிவந்து கொண்டிருந்தபோது பங்குச்சந்தை படுமோசமாக சரிந்தாலும் தேர்தல் முடிவுக்கு பின்னர் பங்குச்சந்தை உயர்ந்து வருகிறது என்றும் இதனால் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று காலை பங்குச்சந்தை விழுந்தாலும் மாலையில் சரிந்த நிலையில் இன்று மீண்டும் பங்குச்சந்தை உயர்ந்துள்ளதை அடுத்து முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 150 புள்ளிகள் உயர்ந்து 76 ஆயிரத்து 645 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை ஆன நிப்டி 58 புள்ளிகள் உயர்ந்து 23 ஆயிரத்து 318 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய பங்குச்சந்தையில் ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல் ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் ஆசியன் பெயிண்ட், ஹெச்டிஎஃப்சி வங்கி, இந்துஸ்தான் லீவர் உள்ளிட்ட பங்குகள் சரிந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
Edited by Siva