1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : புதன், 12 ஜூன் 2024 (12:57 IST)

சட்டப்பேரவை கூட்டத்தொடர் எத்தனை நாட்கள்.? சபாநாயகர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

assembly
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 20ஆம் தேதி தொடங்கி, ஜூன் 29ஆம் தேதி வரை நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
 
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் ஜூன் 24ஆம் தேதி நடைபெறுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில், விக்கிரவாண்டி தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், பேரவை கூட்டத்தொடர் முன்கூட்டியே ஜூன் 20ஆம் தேதி தொடங்கும் என்று சபாநாயகர் அப்பாவு நேற்று தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில், சபாநாயகர் அப்பாவு தலைமையில் சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் அப்பாவு, தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 20ஆம் தேதி தொடங்கி, ஜூன் 29ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.


காலை 10 மணிக்கு பதில் காலை 9.30 மணிக்கே சட்டப்பேரவை கூடும் என அவர் தெரிவித்துள்ளார். ஜூன் 21, 22, 24 ஆகிய தேதிகளில் மானியக் கோரிக்கைகள் மீது பேரவையில் விவாதம் நடைபெறுகிறது.