சந்திராயன் 2 விண்கலம்: இரண்டாவது முறையாக புவிசுற்றுப்பாதை அதிகரிப்பு

Last Modified வெள்ளி, 26 ஜூலை 2019 (08:08 IST)
இஸ்ரோ விஞ்ஞானிகள் சமீபத்தில் சந்திராயன் 2 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய நிலையில் தற்போது சந்திராயன்-2 புகைப்படங்களை எடுத்து அனுப்ப தொடங்கியுள்ளது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் சந்திராயன் 2 விண்கலத்தின் புவி சுற்றுப்பாதை 45 ஆயிரத்து 475 கிலோ மீட்டராக உயர்த்தப்பட்டதாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இதனை அடுத்து தற்போது மீண்டும் சந்திரனின் புவி வட்டப் பாதை உயர்த்தப்பட்டுள்ளது

சந்திராயன்-2 விண்கலத்தின் சுற்றுவட்டப் பாதை திட்டமிட்டபடி இரண்டாவது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது விண்கலம் 54 ஆயிரத்து 829 கிலோ மீட்டர் உயரத்தை தொட்டு உள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி நிலாவின் சுற்றுவட்டப்பாதையில் விண்கலம் பயணிக்கத் தொடங்கும் என்றும் இது இந்திய விண்வெளித் துறையின் ஒரு சிறப்பான மைல்கல் என்றும் அவர்கள் தெரிவித்தனர்

இந்தியா அனுப்பிய சந்திராயன்-2 விண்கலத்தின் மிகப்பெரிய வெற்றியை உலக நாடுகள் ஆச்சரியத்துடன் பார்த்து வருவதாகவும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர் தெரிவித்துள்ளனர்


இதில் மேலும் படிக்கவும் :