வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 23 ஜூலை 2019 (11:23 IST)

”நிலவிற்கு செல்லும் முதல் பெண்”.. நாசாவின் அதிரடி திட்டம்

2024 ஆம் ஆண்டு, அமெரிக்க விண்வெளி நிலையமான ”நாசா”, நிலவுக்கு முதல் பெண்ணை அனுப்பவிருப்பதற்கான திட்டத்தை அறிவித்துள்ளது.

நிலவில் முதல் முதலாக மனிதர்கள் காலடி எடுத்து வைத்ததன் 50 ஆவது ஆண்டை, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான ”நாசா”, கொண்டாடி வருகிறது. இந்நிலையில் அடுத்த கட்ட ஆராய்ச்சிகளை பற்றி நாசா தற்போது அறிவித்துள்ளது.

அந்த அறிவிப்பில், வரும் 2024 ஆம் ஆண்டு, நிலவின் இதுவரை ஆய்வு செய்யாத பகுதிகளை ஆய்வு செய்யும் முயற்சியாக, முதல் முறையாக ஒரு பெண்ணை அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் நிலவுக்கு மனிதர்களை அனுப்புவதுடன், செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியின் முன்னோட்டமாக இது இருக்கும் எனவும் நாசா தெரிவித்துள்ளது. இதை குறிப்பிடும் வகையில் இந்த திட்டத்திற்கு ”ஆர்தமிஸ்” என்று பெயரிடப்பட்டுள்ளது. நாசா அனுப்பவிருக்கும் முதல் பெண்ணுடன், மேலும் ஒரு ஆணையும் அனுப்பவிருக்கும் செய்தி கூடுதல் தகவல்.