வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 26 அக்டோபர் 2021 (08:04 IST)

ஆர்யன்கானை விடுவிக்க கோடிக்கணக்கில் பணபேரமா? பெரும் பரபரப்பு

பிரபல நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் போதைப்பொருள் வழக்கில் சிக்கி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவரை விடுவிக்க கோடிக்கணக்கில் பணம் நேரம் நடந்ததாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
மும்பையில் உள்ள சொகுசு கப்பலில் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் போதை பொருள் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் அவரது ஜாமீன் மனு ஏற்கனவே இரண்டு முறை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது என்பதும் இன்று அந்த மனு விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் போதைப்பொருள் வழக்கில் இருந்து ஆர்யன்கானை விடுவிக்க கோடிக்கணக்கில் பணம் பேரம் பேசியதாக அதிகாரி ஒருவர் சிக்கி உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. புகாரில் சிக்கி அதிகாரி திடீரென டெல்லி பயணம் சென்றுள்ளதாகவும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.