ஷாருக்கான் பாஜகவில் இணைந்தால்... எல்லாம் மாறும்!
நடிகர் ஷாருக்கான் பாஜகவில் இணைந்து விட்டால் போதைப்பொருள் எல்லாம் சர்க்கரையாக மாறிவிடும் என அமைச்சர் கருத்து.
நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 7 பேர் சொகுசுக் கப்பலில் போதை பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டனர். இது நாடு முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் இப்போது அவர்கள் விசாரணைக் கைதிகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மும்பை மத்திய சிறையில் இருக்கும் ஆர்யன் கானை ஷாருக் கான் நேரில் சென்று சந்தித்தார். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. இதனிடையே மகராஷ்டிரா அமைச்சர் சஹாஜன் புஜ்பால் போதைப்பொருள் பயன்பாடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது நடிகர் ஷாருக்கான் பாஜகவில் இணைந்து விட்டால் போதைப்பொருள் எல்லாம் சர்க்கரையாக மாறிவிடும் என தெரிவித்துள்ளார்.