1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 21 அக்டோபர் 2021 (09:41 IST)

மகன் ஆர்யன்கானை சிறையில் சந்தித்த ஷாருக்கான்!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் போதைப்பொருள் வழக்கில் சிக்கி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஆரியன்கானை அவரது தந்தையும் நடிகருமான ஷாருக்கான் சிறையில் சந்தித்து உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. 
 
போதை மருந்து வழக்கில் ஆர்யன்கான் கைது செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்தது. இந்த நிலையில் மும்பை சிறையில் உள்ள ஆரியன்கானை அவரது தந்தை ஷாருக்கான் சந்தித்துள்ளார். இருவரும் சில நிமிடங்கள் நெகிழ்ச்சியாக பேசியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது 
 
இந்த நிலையில் மீண்டும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன .ஆனால் காவல்துறை தரப்பில் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்பதால் ஜாமின் இந்த முறையும் கிடைக்காது என்றே கூறப்பட்டு வருகிறது.