வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 22 அக்டோபர் 2021 (16:32 IST)

ஆர்யன்கானுக்கு கஞ்சா ஏற்பாடு செய்தாரா? பிரபல நடிகையிடம் விசாரணை

ஷாருக்கான் மகன் ஆர்யன்கானுக்கு கஞ்சா ஏற்பாடு செய்ததாக சந்தேகப்பட்டு பிரபல நடிகை ஒருவரிடம் விசாரணை செய்து கொண்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் போதை பொருள் பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு சமீபத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் ஆர்யன்கானுக்கு கஞ்சா ஏற்பாடு செய்ததாக நடிகை அனன்யா பாண்டே மீது புகார் எழுந்துள்ளது. இந்த புகார் குறித்து போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள் அவரது வீட்டில் சோதனை செய்து அவரிடம் விசாரணை செய்தனர்.மேலும் இதுகுறித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது அவர் இந்த குற்றச்சாட்டை மறுத்ததாக கூறப்படுகிறது.இருப்பினும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்தநிலையில் போதைப்பொருள் விவகாரத்தில் அனன்யா பாண்டே சிக்கியுள்ளதை அடுத்து அவர் ஒப்புக்கொண்ட பல படங்களின் தயாரிப்பாளர்கள் அவரை நீக்கிவிட்டதாக கூறப்படுகிறது