தொடர்புடைய செய்திகள்
- காதல் திருமணம்... மகளை எரித்துக் கொன்ற கொடூர பெற்றோர் !
- ஒருதலைக் காதல் – ஒத்துக்கொள்ளாத பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த இளைஞர் !
- வீலிங் செய்த இளைஞர்! தலைகுப்புற விழுந்த தாத்தா! – வைரல் வீடியோ!
- ஆளுங்கட்சி எம்.எல்.ஏ கைது.. ரெட்டியின் அதிரடி நடவடிக்கை
- ஹெல்மெட் தலைக்கா? பெட்ரோல் டேங்குகளுக்கா? நீதிமன்றம் கண்டனம்
மீண்டும் ஒரு ஆணவக் கொலை – கழுத்தை நெறித்து மகளைக் கொன்ற பெற்றோர் !
ஆந்திராவில் தன் விருப்பப்படி காதல் திருமணம் செய்துகொண்ட மகளை பெற்றோர் கொன்று பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது.
ஆந்திராவில் குப்பம் என்ற பகுதிக்கருகில் ரெட்லப்பள்ளி எனும் கிராமத்தில் வெங்கடேஷ், அமராவதி எனும் தம்பதியினர் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு சந்தனா என்ற 17 வயது மகள் உள்ளார். இவருக்கும் அதேப் பகுதியைச் சேர்ந்த பிரபு என்ற மேஸ்திரி வேலை செய்யும் 19 வயது இளைஞனுக்கும் கடந்த 3 வருடங்களாக காதல் இருந்துள்ளது.
இவர்கள் இருவரும் வெவ்வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு வீட்டில் மறுப்பு இருந்துள்ளது. அதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி கடந்த அக்டோபர் 11 ஆம் தேதி திருமணம் செய்துகொண்டுள்ளனர். இந்நிலையில் தனது மகளை தேடி கண்டுபிடித்த சந்தனாவின் பெற்றோர், அவரை வீட்டுக்கு அழைத்து வந்து மனமாற்றம் செய்ய முயற்சித்துள்ளனர். ஆனால் சந்தனா பிரபுவோடுதான் வாழ்வேன் என பிடிவாதமாக சொல்லிவிட்டதால் அவரைக் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு பெட்ரோல் ஊற்றி தங்கள் வயலில் வைத்து எரித்துக் கொன்றுள்ளனர்.
இது சம்மந்தமாக சந்தனாவின் கணவர் பிரபு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க அவர்கள் சந்தனாவின் பெற்றோரைக் கைது செய்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
