வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: ஞாயிறு, 6 அக்டோபர் 2019 (16:53 IST)

ஆளுங்கட்சி எம்.எல்.ஏ கைது.. ரெட்டியின் அதிரடி நடவடிக்கை

பெண் அதிகாரியை மிரட்டிய ஆளுங்கட்சி எம்.எல்.ஏவை போலீஸார் கைது செய்துள்ளனர்

ஆந்திர மாநிலம் நெல்லூர் ரூரல் தொகுதியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியை சேர்ந்த் எம்.எல்.ஏ. ஸ்ரீதர் ரெட்டியின் மீது, மண்டள வளர்ச்சி அதிகாரி சரளா என்பவர் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், தனி நபர் ஒருவருக்கு குடிநீர் வழங்க தாமதம் ஆனதால், தன்னை ஸ்ரீதர் ரெட்டி மிரட்டியதாக கூறியுள்ளார். மேலும் அவரது வீட்டிற்கும் வந்து மிரட்டியதாக கூறியுள்ளார்.

எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். ஆனால் அப்போது சப்-இன்ஸ்பெக்டர் இல்லாததால் அவரின் புகாரை வாங்க மறுத்துள்ளனர். சரளாவோ இன்ஸ்பெகடர் வரும்வரை அங்கயே இருந்துள்ளார்.

இந்த செய்தி அங்குள்ள ஊடகங்கள் மூலம் பரவியது. இந்த செய்தியை அறிந்த ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, டி.ஜி.பி.க்கும் கலெக்டருக்கும் தொடர்பு கொண்டு விசாரிக்கும்படி கூறியுள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பெண் அதிகாரியிடம் விசாரணை நடத்தியுள்ளார். பின்னர் எம்.எல்.ஏ. மிரட்டிய விஷயத்தை ஜெகன் மோகன் ரெட்டியிடம் தெரிவித்தார். உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டார் ஆதலால் பெண் அதிகாரியை மிரட்டிய ஸ்ரீதர் ரெட்டியை போலீஸார் கைது செய்தனர்.

தனது கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. என்றும் பொருட்படுத்தாமல், கைது செய்துள்ள சம்பவம் குறித்து ஜெகன் மோகன் ரெட்டிக்கு பலர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.