மீண்டும் அதே கட்டிடத்தில் தீ விபத்து..

Arun Prasath| Last Modified திங்கள், 9 டிசம்பர் 2019 (10:04 IST)
டெல்லியில் நேற்று தீ விபத்து ஏற்பட்ட அதே 4 மாடி கட்டிடத்தில் இன்று காலை மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் அமைந்துள்ள அனஜ் மண்டி என்ற 4 மாடி கட்டிடத்தில் நேற்று தீடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்த்தில் 43 பேர் பலியாகினர். கிட்டதட்ட 5 மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். 63 க்கும் அதிகமானோர் தீ விபத்திலிருந்து மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை அதே கட்டிடத்தில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது. தீயினை அணைக்கும் முயற்சியில் 4 தீயணைப்பு வாகனத்தில் வந்த வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். அனஜ் மண்டி கட்டிடத்தில் முறையாக அனுமதி பெறாத தொழிற்சாலைகள் இயங்கி வந்ததாக கூறப்படுகிறது. மேலும் போலீஸார் கட்டிடத்தின் உரிமையாளர் ரெஹான் என்பவரை கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :