புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: சனி, 7 டிசம்பர் 2019 (14:13 IST)

நடனம் ஆடாததால் பெண்ணை துப்பாக்கியால் சுட்ட கொடூரம்..வைரல் வீடியோ

உத்தர பிரதேசத்தில் நடனம் ஆடாததால் பெண்ணை துப்பாக்கியால் சுட்ட இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

உத்தர பிரதேசம் மாநிலம் சித்ரகூட் பகுதியின் திக்ரா கிராமத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் இசைக் கச்சேரியுடன், நடன கச்சேரியும் நடைபெற்றது. அப்போது ஒரு பாடலுக்கு ஹீனா தேவி என்பவர் தனது தோழியுடன் நடனமாடிக் கொண்டிருந்தார். நடனமாடிக் கொண்டிருக்கையில் சிறிது நேரம் நடனமாடாமல் ஓய்வு எடுப்பதற்காக நின்றார்.

அப்போது மணமகளின் தந்தை சுதிர் சிங்கின் உறவினர் பூல் சிங் என்பவர், தான் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் ஹீனா தேவியின் முகத்திலேயே சுட்டார். ஹீனா தேவி நடனமாடாததால் கோபமடைந்து பூல் சிங் சுட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவரை தொடர்ந்து சுதிர் சிங்கும் அப்பெண்ணை சுட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த துப்பாக்கி சூட்டில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து இத்தகவலை அறிந்த போலீஸார் வழக்கு பதிவு செய்து பூல் சிங் மற்றும் சுதிர் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும் ஹீனா தேவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலமாக உள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.