திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 8 டிசம்பர் 2019 (09:42 IST)

டெல்லியில் அதிகாலையில் நடந்த பயங்கர தீ விபத்து: 32 பேர் பலியா?

டெல்லியில் இன்று அதிகாலை அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 32 பேர் பலியானதாக அதிர்ச்சிதரும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது 
 
டெல்லி ஜான்சிராணி சாலைகள் அனஜ்மண்டி என்ற பகுதியில் இன்று அதிகாலை சுமார் 5 மணி அளவில் அடுக்குமாடி குடியிருப்பு வீடு ஒன்றில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்த தகவல் அறிந்தவுடன் டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் இருந்து 30 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன
 
தீ விபத்து நடந்த நேரம் அதிகாலை என்பதால் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த பெரும்பாலான மக்கள் தூங்கிக் கொண்டிருந்ததால் தீ விபத்து குறித்து உடனடியாக மற்ற அருகில் உள்ள வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியவில்லை. இதனால் பலர் தீ விபத்தில் சிக்கியதாக தெரிகிறது 
 
இதனை அடுத்து தீயணைப்பு படையினர்களின் தீவிர முயற்சியால் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த தீ விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை 32 பேர் பலியானதாக தீயணைப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன 
 
இன்னும் இடிபாடுகளுக்கு இடையில் இன்னும் சில வீடுகளில் இடிபாடுகளை அகற்ற வேண்டி இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது இந்த தீ விபத்து குறித்து விசாரணை நடந்து வருவதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்