வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Updated : சனி, 7 டிசம்பர் 2019 (14:17 IST)

”நான் தான் பரமசிவன்.. என்னை யாராலும் தொட முடியாது”.. நித்யானந்தா சவால்

ஈக்குவடார் நாட்டில் கைலாசா என்ற தனி தீவில் இருப்பதாக கூறப்படும் நித்யானந்தா, சமீபத்தில் அவர் பேசி வெளியான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

பாலியல் புகார், குழந்தை கடத்தல் போன்ற பல பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் நித்தியானந்தாவை குஜராத் போலீஸார் வலை வீசி தேடி வருகின்றனர். இதனை தொடர்ந்து நித்யானந்தாவை கண்டுபிடிக்க புளுகார்னர் நோட்டீஸ் அளிக்க சர்வதேச புலனாய்வு அமைப்பான இண்டர்போலுக்கு குஜராத் குற்றப்பிரிவு கடிதம் அனுப்பி அனுமதி பெறுமாறு அகமதாபாத் போலீஸ் குஜராத் குற்றப்பிரிவுக்கு கடிதம் எழுதியுள்ளது.

இந்நிலையில் கடந்த 22 ஆம் தேதி முதல் புதிதாக பல வீடியோக்களை வெளியிட்டுள்ள நித்தியானந்தா, சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில் ”இப்போது என்னை யாரும் தொடவும் முடியாது, அழிக்கவும் முடியாது. நான் தான் பரமசிவம்” என சவால் விட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகிறது.