தொடர்புடைய செய்திகள்
- உங்கள் இளமையின் ரகசியம் என்ன? துரைமுருகனை கலாய்த்த துணை முதல்வர்
- எல்லோரும் பிரதமர் மோடியை அவமதிக்கிறார்கள்; ஆளுநரிடம் புகார் அளித்த பாஜக
- என்னை 'ஜல்லிக்கட்டு நாயகன்’ என அழைக்க வேண்டாம்: துணை முதல்வர் ஓபிஎஸ்
- ஆப்ரேஷன் கருடா உண்மையா இருக்குமோ? சந்தேகிக்கும் சந்திரபாபு நாயுடு!
- அரசு பில் கலெட்டருக்கு 4 வீடு, 20 பிளாட், ரூ.50 கோடி சொத்து....
நான் தற்கொலை செய்துக்கொள்வேன்: பகிரங்கமாக மிரட்டும் ஆந்திர துணை முதல்வர்!
ஆந்திராவிடம் இருந்து தெலங்கானா பிரிக்கப்பட்ட போது, ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என மத்திய அரசு உறுதியளித்திருந்தது. ஆனால், கொடுத்த வாக்கை காப்பாற்ற தவறிவிட்டது மத்திய அரசு.
இதனால், ஆத்திரமடைந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பாஜகவுடனான தெலுங்கு தேச கட்சியின் கூட்டணியை முறித்துக்கொண்டார். அதோடு, மோடியையும் மத்திய அரசையும் கடுமையாக விமர்சித்து வந்தார்.
இதற்கிடையே அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுக்காக மூன்றாவது தேசிய கட்சியை உருவாக்கும் முயற்சி நடந்துவருகின்றன. இந்த முயற்சியில் தெலுங்கு தேசம் கட்சி முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
ஆனால், தெலுங்கு தேசம் கட்சி காங்கிரஸுடன் இணைந்து கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இது குறித்து ஆந்திர துணை முதல்வர் கிருஷ்ண மூர்த்தியிடம் கேட்ட போது, தெலுங்கு தேசம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமைத்தால் நான் தற்கொலை செய்துக்கொள்வேன் என பகிரங்க மிரட்டலை விடுத்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்
