திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 8 ஜூன் 2018 (14:14 IST)

திமுகவுடன் ரகசிய உறவா? - தினகரன் கலகல பேட்டி (வீடியோ)

கரூர் அருகே அரவக்குறிச்சி பகுதியை அடுத்த பள்ளப்பட்டியில், இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் நடைபெற்றது. 

 
அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் இப்தார் நோன்பு திறந்து வைத்து செய்தியாளர்களை சந்தித்தார்.
 
அப்போது, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்தில் நடைபெறும் பிரச்சினைகளுக்கு தி.மு.கதான்  காரணம் என்றும், அதற்கும் டி.டி.விக்கும் சம்பந்தம் என்றும், தி.மு.க டி.டி.வி தினகரனை இயக்குவதாகவும், அதற்கு உதாரணம், தி.மு.க தலைவர் கருணாநிதி, பிறந்த நாளில், அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் அலுவலகத்தினை திறந்ததாகவும் கூறியதை செய்தியாளர்கள் சுட்டிக்காட்டினர். 
 
அதற்கு பதிலளித்த தினகரன் “அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம், 3ம் தேதி தி.மு.க தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் என்றால், எதுவும் செய்யக்கூடாதா? என்றும் கேள்வி எழுப்பியதோடு, அது அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு என்று செய்தியாளர்கள் சுட்டிக்காட்டிய போது, அவருடைய குற்றச்சாட்டிற்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, அவர் (அமைச்சர் ஜெயக்குமார்) தினந்தோறும் இது போலத்தான் கோமாளித்தனமாக கூறி வருகிறார். தமிழகத்தில் பல்வேறு குற்றச்சாட்டுகள் நடைபெற்று வரும் நிலையில், தூத்துக்குடி துப்பாக்கி சம்பவங்களை திசை திருப்ப தான் இது போன்று அவர் கூறி வருவதாகவும் கூறினார். 
 
டி.டி.வி தினகரன், தி.மு.க தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் அன்று வாழ்த்து தெரிவித்ததோடு, தற்போது, அவரது பிறந்த நாள் அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்ட கேள்வியினால் தி.மு.க தலைவர் கருணாநிதியை அமாவாசை? அப்துல்காதர் என்று மறைமுகமாக சாடியுள்ளாரா? என்றும், மேலும் அவரது பிறந்த நாள் என்றால் நான் எதுவும் செய்யக்கூடாதா என்ற பதில்கள் தி.மு.கவினரிடையே பெரும் பலத்த எதிர்ப்புகள் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரு கட்சித்தலைவரை வாழ்த்தி விட்டு, இது போல், அரசியல் நாகரீகமில்லாத பேட்டி மூலம் பதிவு என்பது பலரையும் முகம் சுளிக்கவும் வைத்துள்ளது.
 
-சி.ஆனந்தகுமார்