1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 7 ஜூன் 2018 (17:26 IST)

உங்கள் இளமையின் ரகசியம் என்ன? துரைமுருகனை கலாய்த்த துணை முதல்வர்

கடந்த சில நாட்களாகவே சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் ஊடகங்களில் முக்கிய செய்தியாக இடம்பெற்று வருகிறார். வட்டாட்சியர், கொட்டாட்சியர் என்று செய்தியாளர்களிடம் கூறியதில் இருந்தே அவர் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு தீனி போட தொடங்கிவிட்டார்.
 
இந்த நிலையில் இன்று சட்டப்பேரவையில் விவாதம் நடந்து கொண்டிருந்தபோது காரசார விவாதங்களுக்கு நடுவே காமெடியும் நடந்தது. அதிமுக எம்எல்ஏ லோகநாதன் புதிய வட்டங்களை உருவாக்க வேண்டும் என்று வருவாய்த்துறை அமைச்சரிடம் கேட்டப்போது அம்மாவின் அரசு இதுவரை 72 வட்டங்களை அமைத்துள்ளதாக தெரிவித்தார். அப்போது 'அம்மாவின் அரசு 73வது வட்டத்தையும் அமைக்க வேண்டும் என்று துரைமுருகன் கூறினார் 
 
இதற்கு பதில் கூறிய ஓபிஎஸ், 'அம்மாவின் அரசு என்று ஒப்புக்கொண்டதற்கு நன்றி' என்று கூறினார். மேலும் துரைமுருகன் அவர்கள் கலர்ஃபுல்லாக 16 வயது இளைஞர் போல் இருப்பதாக கூறி, உங்கள் இளமையின் ரகசியம் என்ன? என துரைமுருகனிடம் கேட்டார். இதனால் அவையில் சில நிமிடங்கள் சிரிப்பலைகள் ஏற்பட்டது. இன்று துரைமுருகன் சட்டசபைக்கு டை அடித்து கலர் சட்டையில் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.