1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. An IT employee in Bangalore committed suicide

ஐடி ஊழியர் 12வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை

பெங்களூர்
பெங்களூருவில் ஐடி ஊழியர் ஒருவர் 12 வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பவேஷ் ஜெய்ஸ்வால் என்ற 23 வயது இளைஞர், கடந்த ஒரு வருடமாக பெங்களூர் ஒயிட்பீல்டு ஐடிபிஎல் பகுதியில் உள்ள எம்யூ சிக்மா என்ற ஒரு தனியார் ஐடி நிறுவனத்தில் பிஸினஸ் அனலிசிஸ்ட்டாக பணியாற்றி வந்தார். 
 
இந்நிலையில் ஆபிசிலிருந்து பாத்ரூமுக்கு சென்ற பவேஷ், 12-வது மாடியிலிருந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
 
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், பவேஷ் ஜெய்ஸ்வாலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார், பவேஷின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
அடுத்த கட்டுரையில்
20 வருடங்களாக நிர்வாணமாக துன்புறுத்தல்: பைத்தியமான பெண்!