1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Cuddalore lady police attempted suicide

பெண் போலீஸ் விஷம் குடித்து தற்கொலை முயற்சி: கடலூரில் பரபரப்பு

கடலூர்
கடலூரில் பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கடலூரில் ஆயுதப்படை போலீஸாக பணிபுரிபவர் கவிதா. இவர் தனது கணவர் சத்தியசீலனுடன் அங்குள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வருகிறார். இவரது கணவரும் ஆயுதப்படை போலீஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
 
கவிதா இன்று காலை வழக்கம் போல் தனது பணியை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பியுள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இவர் திடீரென விஷம் அருந்தியுள்ளார். இதனையடுத்து, அவரை அருகிலுள்ள குடியிருப்பு வாசிகள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
 
இந்த சம்பவம் தொடர்பாக புதுநகர் போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பணிச்சுமை காரணமாக கவிதா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
அடுத்த கட்டுரையில்
3 வது நாளாக அரவிந்த் கெஜ்ரிவால் தர்ணா போராட்டம்!