1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated: வியாழன், 14 ஜூன் 2018 (13:06 IST)

தாம்பத்யத்தில் ஈடுபாடு இல்லாத கணவர் : காரணம் தெரிந்த மனைவிக்கு கடும் அதிர்ச்சி

பெண்ணாக இருந்து ஆணாக மாறியவர் தீக்குளித்த சம்பவம் கடலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் இளவரசி(26). இவர் புதுச்சேரியில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் கிருகம்பாக்கத்தில் உள்ள ஒரு கல்லூரியில் ஸ்டோர் கீப்பராக பணிபுரிந்து வரும் யஷ்வந்தய்யா என்பவரை 2 வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
 
சில மாதங்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்த நிலையில், யஷ்வந்தய்யா தாம்பத்ய உறவில் ஈடுபாடு இல்லாமல் இருந்துள்ளார். எனவே, அவர் மீது இளவரசிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதுபற்றி அவர் விசாரித்த போது யஷ்வந்தய்யா பெண்ணாக இருந்த அறுவை சிகிச்சை செய்து ஆணாக மாறியவர் என்ற அதிர்ச்சியான உண்மை இளவரசிக்கு தெரிய வந்துள்ளது.
 
எனவே, யஷ்வந்தய்யா எவ்வளவு வற்புறுத்தியும் அவருடன் வாழ சம்மதிக்காமல் அவரை பிரிந்து இளவரசி தனியாக வாழ்ந்து வந்தார். 
 
இந்நிலையில், கடந்த 7ம் தேதி இளவரசி பணிபுரியும் அழகு நிலையத்திற்கு சென்று தன்னுடன் வாழ வருமாறு யஷ்வந்தய்யா மீண்டும் வற்புறுத்தியுள்ளார். ஆனால், இளவரசி சம்மதிக்கவில்லை. இதனால், விரக்தியடைந்த யஷ்வந்தயா தான் கொண்டு வந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். 
 
அதன்பின் அவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.